லாரி மோதி கொத்தனார் பலி

தியாகதுருகம் அருகே லாரி மோதி கொத்தனார் பலியானாா்கள்.

Update: 2023-08-04 18:45 GMT

தியாகதுருகம்:

ரிஷிவந்தியம் அருகே உள்ள பிரிவிடையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சரத்குமார் (வயது 29). கொத்தனார். இவர் சொந்த வேலையாக உளுந்தூர்பேட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தியாகதுருகம் அருகே புக்குளம் மேம்பாலத்தில் சென்றபோது, பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்தவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரத்குமார் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது தாய் பார்வதி தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் விபத்தை ஏற்படுத்தியதாக நாமக்கல் மாவட்டம் வசந்தபுரத்தை சேர்ந்த லாரி டிரைவர் மாதவன் (55) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்