செங்கல்சூளை உரிமையாளரின் மோட்டார் சைக்கிள் எரிப்பு

செங்கல்சூளை உரிமையாளரின் மோட்டார் சைக்கிள் தீவைத்து எரிக்கப்பட்டது.

Update: 2022-08-17 19:29 GMT

நெல்லை அருகே உள்ள சீவலப்பேரி ராம்நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் துர்க்கை ராஜன் (வயது 27). இவர் சீவலப்பேரியில் செங்கல்சூளை வைத்து உள்ளார். இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிள் பஞ்சர் ஆனதால் ஒருவரது வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு சென்றாராம். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அந்த மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து துர்க்கை ராஜன் நெல்லை தாலுகா போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்