அரசு ஆஸ்பத்திரியில் தாய்ப்பால் வார விழா
வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் தாய்ப்பால் வார விழா நடந்தது;
வேதாரண்யம் :
வேதாரண்யம், அகஸ்தியன்பள்ளி, நாலுவேதபதி, கரியாப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் தாய்ப்பால் வார விழா கடந்த 1-ந் தேதி முதல் 5-ந் ேததி வரை நடந்தது. வேதாரண்யத்தில் நடந்த விழாவுக்கு ரோட்டரி சங்க தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். டாக்டர்கள் ராஜசேகர், ஆனந்தன், சுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்தும், நன்மைகள் குறித்தும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.