தாய்ப்பால் வார விழா

தாய்ப்பால் வார விழா

Update: 2023-08-02 18:45 GMT

பூந்தோட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு கூட்டம் பொது சுகாதாரத்துறை மற்றும் ஊட்டச்சத்து துறை சார்பில் நடந்தது. இதில் பூந்தோட்டம் ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் லதா, வட்டார ஊட்டச்சத்து அலுவலர் சுமதி, பகுதி சுகாதார செவிலியர் நிர்மலா, ஊட்டச்சத்து மேற்பார்வையாளர் சாந்தி, வட்டார ஒருங்கிணைப்பாளர் கார்த்தி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஸ்ரீதர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், ஊட்டச்சத்து பணியாளர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் தாய்- சேய் பிணைப்பு, நோய் எதிர்ப்பு சக்தி, இயற்கை கருத்தடை போன்ற தாய்ப்பால் சிறப்புகள் பற்றி தாய்மார்களுக்கு விளக்கி கூறப்பட்டது.

அதேபோல் குடவாசல் ஒன்றியம் திருவீழிமிழலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு சமுதாய சுகாதார செவிலியர் வசந்தா தலைமை தாங்கினார். சுகாதார செவிலியர் கூடலழகி வரவேற்றார். விழாவில் வட்டார மருத்துவ அலுவலர் ஜெகதீஷ் கலந்துகொண்டு தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து பேசினார். இதில் ஏராளமான தாய்மார்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்