கோவில் உண்டியலை உடைத்து திருட்டு

திருவள்ளூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து நகை, பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.;

Update: 2022-06-25 07:15 GMT

திருவள்ளூர் அடுத்த நெமிலி அகரம் கிராமத்தில் உள்ளது செல்லத்தம்மன் கோவில். இதன் அருகே உள்ள கீழ்விளாகம் கிராமத்திலுள்ள பாப்பாத்தி அம்மா கடும்பாடிஅம்மன் ஆகிய மூன்று கோவில்கள் உள்ளன. இந்த மூன்று கோவில்களிலும், நேற்று இரவு வழக்கம் போல் பூஜை முடிந்து பூட்டிவிட்டு சென்றனர். இந்த நிலையில், நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த தங்க நகை, உண்டியலை உடைத்து பணம் மற்றும் அலங்கார தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து கிராம பொதுமக்கள் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தனர். இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்