வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.;

Update:2022-07-31 12:26 IST

திருவள்ளூரை அடுத்த காக்களூர் பட்டேல் தெருவை சேர்ந்தவர் கிரிஜா (வயது 60). இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 2 பவுன் நகை, ரூ.20 ஆயிரத்தையும் திருடி சென்றனர். இது குறித்த திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்