வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
பாணாவவம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகையை திருடிச்சென்றனர்.;
பாணாவரத்தை அடுத்த சூரைக்குளம் கிராமத்தில் உள்ள ரோட்டு தெருவை சேர்ந்தவர் சரோஜா (வயது 63). இவர் நேற்று அதே கிராமத்தில் வசித்து வரும் சகோதரர் வீட்டின் துக்க நிகழ்ச்சிக்குசென்று, இரவில் அங்கேயே தங்கியுள்ளார். நேற்று காலை வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 2 பவுன் நகை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பாணாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.