வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து நகைைய திருடி சென்றனர்.;
சிவகாசி,
சாத்தூர் தாலுகாவில் உள்ள பெரிய ஓடைப்பட்டியை சேர்ந்தவர் காளியம்மாள் (வயது 70). இவரது கணவர் வேல்சாமி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். இதைதொடர்ந்து காளியம்மாள் தனியாக வசித்து வந்தார். அவ்வப்போது 100 நாள் வேலைக்கு சென்று வருவார். இந்தநிலையில் சம்பவத்தன்று காலையில் வழக்கம் போல் 100 நாள் வேலைக்கு சென்று விட்டு மதியம் வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 2 ஜோடி தங்க கம்மல் மற்றும் ரூ.20 ஆயிரம் ஆகியவற்ைற மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.