வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடப்பட்டுள்ளது.
தவுட்டுப்பாளையம் அருகே கட்டிப்பாளையம் 3-வது தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 60). இவரது மனைவி மீனாட்சி (53). இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பின்னர் மதியம் வீட்டுக்கு வந்து பார்த்தார்.
அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து மீனாட்சி வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 6 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து மீனாட்சி ெகாடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிந்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.