ஓட்டலின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

ஓட்டலின் பூட்டை உடைத்து பணம் திருட்டு போனது.

Update: 2022-06-18 17:56 GMT

இலுப்பூர் அருகே சென்னப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் நாகராஜன். இவர் இலுப்பூரில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டல் அருகே வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், போலீஸ் நிலையம் என முக்கிய அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாகராஜன் நேற்று இரவு வியாபாரத்தை முடித்து விட்டு இருந்த பணம் எல்லாம் கல்லா பெட்டியில் வைத்துவிட்டு ஓட்டலை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் வழக்கம்போல் இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்த போது கல்லாபெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த பணத்தை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது. பின்னர் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை பார்த்தபோது, அதில் மர்ம நபர் ஒருவர் பூட்டை உடைத்து கல்லாபெட்டியில் இருந்த பணத்தை திருடி சென்றது பதிவாகியிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து நாகராஜன் கண்காணிப்பு கேமராவில் பதிவான ஆதாரத்துடன் இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்