விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.4½ லட்சம் நகை, பணம் திருட்டு

பேரணாம்பட்டு அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.4½ லட்சம் நகை, பணம் திருட்டு

Update: 2022-06-13 18:44 GMT

பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு அருகே உள்ள சாமரிஷிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன் (வயது 60), விவசாயி.

இவரது மனைவி இந்திரா கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். கேசவன் நேற்று முன்தினம் மதியம் தனது வீட்டை பூட்டி விட்டு அதே கிராமத்திலுள்ள தனது விவசாய நிலத்தில் நிலக்கடலை பயிரிடுவதற்காக சென்றிருந்தார்.

பின்னர் மாலையில் வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் வெளிப்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த பிரேஸ்லெட், கம்மல், மோதிரங்கள், தங்க காசுகள் என ரூ.4 லட்சம் மதிப்புள்ள 9¼ பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.55 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை.

இதனை மர்ம நபர்கள் திருடிசென்றது தெரியவந்தது.

இது குறித்து மேல்பட்டி போலீஸ் நிலையத்தில் கேசவன் நேற்று மாலை கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பட்டபகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்