மருத்துவமனை கதவை உடைத்து ரூ. 26 ஆயிரம் திருட்டு

மருத்துவமனை கதவை உடைத்து ரூ. 26 ஆயிரம் திருடுபோனது

Update: 2022-10-15 20:47 GMT


மதுரை கே.கே.நகர் கோதண்டபாணி 6-வது குறுக்கு தெருவில் ஆயுஷ் வைத்தியசாலா என்ற மருத்துவமனை உள்ளது. இதன் நிர்வாகியாக ஜான்சி ராணி (வயது 26) உள்ளார். சம்பவத் தன்று இரவு இவர் வழக்கம் போல மருத்துவமனையை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் திறக்க வந்தபோது அதன் முன்கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது மருத்துவமனையில் வைத்திருந்த 26 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து ஜான்சிராணி அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்