வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு
சாத்தான்குளம் அருகே வீட்டின் கதவை உடைத்து நகையை மர்மநபர் திருடிச் சென்றார்.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி மகன் ஆறுமுக நயினார் (வயது 42). இவர் கடந்த 13-ந்தேதி காலை வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். மாலையில் வீடு திரும்பிய போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 4 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.