வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

சூலூர் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை திருடப்பட்டது.

Update: 2023-08-10 19:30 GMT


சூலூர்


கோவையை அடுத்த சூலூர் - செங்கத்துறை ரோடு பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவருடைய மகன் துரைராஜன் (வயது28). கடை ஊழியர். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.


இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு 1½ பவுன் தங்க சங்கிலியை யாரோ திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்