வீட்டின் கதவை உடைத்து திருட்டு

குறும்பனை அருகே வீட்டின் கதவை உடைத்து திருட்டு

Update: 2022-06-09 17:40 GMT

கருங்கல், 

கருங்கல் அருகே குறும்பனை இனிகோ நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ். இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் கடந்த 7-ந் தேதி வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உடனே உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த ரூ.2 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து ஜார்ஜ் கருங்கல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்