இரும்பு கடையின் கதவை உடைத்து ரூ.1 லட்சம்- செல்போன் திருட்டு

பட்டுக்கோட்டையில் இரும்பு கடை கதவை உடைத்து ரூ.1 லட்சம்- செல்போனை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-05-15 20:39 GMT

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டையில் இரும்பு கடை கதவை உடைத்து ரூ.1 லட்சம்- செல்போனை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இரும்புக்கடை

பட்டுக்கோட்டையை அடுத்த சூரப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது73). இவர், பட்டுக்கோட்டை வடசேரி ரோட்டில் இரும்புக் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். மறுநாள் காலை வழக்கம் போல் அவர் கடையை திறக்க சென்றுள்ளார்.

ரூ.1 லட்சம் திருட்டு

அப்போது கடையின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்த ரூ.1 லட்சம் மற்றும் விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

மேலும் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவின் ஹார்ட் டிஸ்க்கை மர்ம நபர்கள் எடுத்து சென்றுள்ளனர்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து சொக்கலிங்கம் பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசிதேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்