ஜெகதளா பேரூராட்சியில் அரசு பள்ளியில் இன்று காலை உணவு திட்டம் தொடக்கம்

ஜெகதளா பேரூராட்சியில் அரசு பள்ளியில் இன்று காலை உணவு திட்டம் தொடக்கம்

Update: 2023-08-24 19:15 GMT

கோத்தகிரி

குன்னூர் சட்டமன்ற தொகுதி, ஜெகதளா பேரூராட்சி பெட்டட்டி சுங்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வருடம் செப்டம்பர் 15-ந் தேதி காலை உணவு திட்டம் தொடங்கி வைத்ததையடுத்து, மறுநாளே நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் ஸ்ரீ மதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக 63 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்த திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜெகதளா பேரூராட்சி பெட்டட்டி சுங்கம் அரசு பள்ளியில் காலை உணவு திட்டம் தொடங்கப்படுகிறது. இந்த திட்டம் குன்னூர், கோத்தகிரி, ஊட்டி மற்றும் கூடலூர் வட்டத்தில் உள்ள 187 ஊராட்சி பள்ளிகளிலும், 80 பேரூராட்சிக்குட்பட்ட பள்ளிகளிலும், 23 நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகள் என மொத்தம் 290 பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்