காலை உணவு திட்டம்: மாணவர்கள் வருகை அதிகரிப்பு - உதயநிதி ஸ்டாலின் டுவீட்

காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2023-04-27 07:49 GMT

சென்னை,

"கள ஆய்வில் முதல்-அமைச்சர்" திட்டத்தின் கீழ், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

"கல்வித்துறையில் மாபெரும் மைல்கல்லான முதலமைச்சரின் காலை சிற்றுண்டித்திட்டத்தினை விழுப்புரம் - மருத்துவமனை வீதி நகராட்சி தொடக்கப்பள்ளியில் ஆய்வு செய்து, மாணவர்களுக்கு காலை உணவு பரிமாறினோம். இத்திட்டத்தின் செயலாக்கத்திற்குப் பிறகு மாணவர்களின் வருகை அதிகரித்திருப்பதாக ஆசிரியர்கள் கூறியது மகிழ்ச்சி அளித்தது.

இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டுகிற வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை சிற்றுண்டித்திட்டத்தை விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் இன்று ஆய்வு செய்தோம். மாணவர்களுடன் அமர்ந்து உணவை உண்டு மகிழ்ந்தோம்." என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்