மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்

திண்டிவனம் தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்;

Update: 2022-09-16 18:45 GMT

திண்டிவனம்

காலை உணவு

திண்டிவனம் முருங்கப்பாக்கம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகெண்டு காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

மாணவிக்கு ஊட்டினார்

பின்னர் அவர், அருகில் இருந்த ஒரு மாணவிக்கு உணவை ஊட்டி மகிழ்ந்தார். இதில் ரவிக்குமார் எம்.பி., கலெக்டர் மோகன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் ஷீலா தேவி சேரன், தாம்பரம் கமிஷனர் இளங்கோவன், திண்டிவனம் சப்-கலெக்டர் அமித், தாசில்தார் வசந்த கிருஷ்ணன், நகராட்சி தலைவர் நிர்மலா ரவிசந்திரன், துணை தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல், நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சேரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்