திடக்கழிவு மேலாண்மை தொட்டி உடைப்பு

போளூர் அருகே திடக்கழிவு மேலாண்மை தொட்டி உடைத்தது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

Update: 2023-10-10 17:22 GMT

போளூர்

போளூர் அருகே திடக்கழிவு மேலாண்மை தொட்டி உடைத்தது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

திடக்கழிவு மேலாண்மை

போளூர் அருகே அலங்காரமங்கலம் ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் உள்ள குப்பைகளை சேர்த்து பொதுவாக ஒரு இடத்தில் கொட்டுவதற்கு 15-வது நிதி குழு திட்டத்தின் மூலம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரிக்கு அருகில் திடக்கழிவு மேலாண்மை அமைக்கப்பட்டது.

ஊராட்சி தலைவரின் உத்தரவின் பேரில் ஒப்பந்ததாரர் முனுசாமி என்பவர் இதனை அமைத்தார். அலங்காரமங்கலம் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் திடக்கழிவு அமைக்கப்பட்ட இடத்தில் கொட்டுவது வழக்கம்.

தொட்டி உடைப்பு

அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் குப்பைகளை இங்கே கொட்டக்கூடாது என்று தூய்மை பணியாளர் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவோடு இரவாக வந்து கடப்பாரை, மண்வெட்டி கொண்டு திடக்கழிவு மேலாண்மைக்காக அமைக்கப்பட்ட தொட்டியை உடைத்து அகற்றியதாக கூறப்படுகிறது.

வழக்கம்போல் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை கொண்டு சென்ற போது தொட்டி உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசில் புகார்

இதுகுறித்து அவர்கள் உடனடியாக தலைவரிடம் தெரிவித்தனர். பின்னர் ஒப்பந்தாரர் முனுசாமி போளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ஊர் பொதுமக்களும், தலைவரும் பொது சொத்துகளை சேதப்படுத்தியவரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்