கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே அட்டை மில் முக்கு சாலையில் அச்சம்மாள் கோவில் உள்ளது. வழக்கம்போல் பூசாரி குருசாமி கோவிலுக்கு சென்றார். அப்போது கோவில் உண்டியல் உடைத்து பணம் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கீழ ராஜகுலராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.