கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
மயிலம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலம்.
மயிலம் அருகே அவணம்பட்டு கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும் அதே ஊரைச் சேர்ந்த பூசாரியான அமாவாசை என்பவர் வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலை திரும்பி வந்து பார்த்தபோது, கோவிலின் வெளிப்பகுதியில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.