கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

ஒரத்தநாடு அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு போனது.

Update: 2023-07-13 20:28 GMT

ஒரத்தநாடு:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள தென்னமநாடு வடக்கு தெருவில் சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குடமுழுக்கு விழா கடந்த சில மாதத்திற்கு முன்பு நடைபெற்றது.இந்த நிலையில் இக்கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்து பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர்.

இது பற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஒரத்தநாடு போலீசார் சென்று விசாரணை நடத்தினர். .கோவில் உண்டியலில் இருந்து திருடப்பட்ட தொகை எவ்வளவு என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்