கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது.;

Update: 2023-07-12 19:15 GMT

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே நல்லமாங்குடி பகுதியில் நாகை சாலையில் ஆகாச காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் வழிபாடு முடிந்ததும் இரவு கதவை பூட்டி செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு வழிபாடு முடிந்ததும் பூசாரி கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று காலை பூசாரி கோவிலுக்கு பூஜை வைக்க வந்தபோது உண்டியல் உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து நன்னிலம் ேபாலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் உண்டியலை உடைத்து பணம் திருடியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்