குழித்துறையில் பேக்கரி ஷட்டரை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு; முகமூடி அணிந்த மர்ம ஆசாமிகள் கைவரிசை

குழித்துறையில் பேக்கரியில் ஷட்டரை உடைத்து ரூ.1 லட்சம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2022-10-03 18:20 GMT

களியக்காவிளை, 

குழித்துறையில் பேக்கரியில் ஷட்டரை உடைத்து ரூ.1 லட்சம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஷட்டர் உடைப்பு

மார்த்தாண்டம் வெட்டுமணி பகுதியை சேர்ந்தவர் பிரபு சிங். இவர் குழித்துறை சந்திப்பு பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வியாபாரம் முடிந்த பின்பு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலையில் கடையை திறக்க வந்த போது பின்பக்க ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கடையின் உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும், மேஜை டிராயர் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் திருடப்பட்டிருந்தது.

முகமூடி அணிந்த மர்ம நபர்கள்

இதுகுறித்து களியக்காவிளை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது, மூகமூடி அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் ஷட்டரை உடைத்து பணத்தை திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

இதுகுறித்து புகாரின் பேரில் களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கண்காணிப்பு கேமரா காட்சி அடிப்படையில் மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்