2 கடைகளில் மேற்கூரையை உடைத்து பணம்-பொருட்கள் கொள்ளை
2 கடைகளில் மேற்கூரையை உடைத்்து பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
சாத்தூர்,
2 கடைகளில் மேற்கூரையை உடைத்்து பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
கடைகளின் மேற்கூரை உடைப்பு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள படந்தால் கிராமத்தை சேர்ந்தவர் சமுத்திரராஜ் (வயது 58). இவர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகே நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகில் வெங்கடாசலபுரத்தை சேர்ந்த அழகுராஜ் (36) என்பவரும் கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 2 கடைக்காரர்களும் வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு சென்றனர். நேற்று காலையில் வழக்கம்போல் கடையை திறந்த போது கடைகளின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பணம் திருட்டு
கடையில் வைத்திருந்த பொருட்கள் மற்றும் பணம் கொள்ளை போனது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செல்லபாண்டியன், செல்வராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை பதிவு செய்தனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.