அஞ்சலகத்தின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

தா.பழூர் அஞ்சலகத்தின் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-07-26 19:09 GMT

துணை அஞ்சலகம்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் கடைவீதியில் துணை அஞ்சலகம் உள்ளது. இங்கு 7 அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் அலுவலக பணிகளை முடித்துவிட்டு துணை அஞ்சலக அதிகாரி மனோகர் (வயது 54) அலுவலகத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

நேற்று காலை துணை அஞ்சலகம் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் மனோகருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார் பின்னர் இதுகுறித்து தா.பழூர் போலீசில் புகார் அளித்தார்.

பணம் திருட்டு

இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அஞ்சலக கருவூலகப் பெட்டி உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.2,950-ஐ மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரிய வந்தது. பின்னர் அங்கு வந்த கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்து இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து அஞ்சலகத்தின் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் அஞ்சலகத்தில் பணத்தை திருடிய மர்ம ஆசாமிகள் அருகே உள்ள மருத்துவமனை மற்றும் சைக்கிள் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையில் திருட முயற்சி செய்து விட்டு தப்பி சென்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்