மருந்து கடையில் பூட்டை உடைத்து பணம் திருட்டு

தூத்துக்குடியில் மருந்து கடையில் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது.;

Update: 2022-12-27 18:45 GMT

தூத்துக்குடி குமாரர் தெருவை சேர்ந்தவர் சாகுல்அமீது (வயது 47). இவர் தூத்துக்குடி தெற்கு சம்பந்த மூர்த்தி தெருவில் மருந்து கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலையில் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சாகுல் அமீது கடையின் உள்ளே சென்று பார்த்தார். அங்கு மேஜை டிராயரில் வைத்து இருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்ம நபர் திருடிச் சென்று விட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மத்திய பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்