விழுப்புரம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

விழுப்புரம் அருகே கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

Update: 2023-09-01 18:45 GMT

விழுப்புரம் அருகே திருவாமாத்தூர் கிராமத்தில் ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக அதே கிராமத்தை சேர்ந்த சீத்தாராமன் (வயது 32) என்பவர் இருந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்ததும் கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் மறுநாள் காலையில் பார்த்தபோது கோவிலின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது கோவிலுக்குள் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் பக்தர்கள் செலுத்தியிருந்த காணிக்கை பணம் கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். உண்டியலில் இருந்த ரூ.3 ஆயிரம் கொள்ளை போயிருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்