வாணாபுரம் அருகேகருடமலை பெருமாள் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளைமர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வாணாபுரம் அருகே கருடமலை பெருமாள் கோவிலில் உண்டியலை உடைத்து கணிக்கை பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வாணாபுரம்,
பெருமாள் கோவில்
வாணாபுரம் அருகே மையனூர் கருடமலையில் பழமைவாய்ந்த வைகுண்ட சீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பழனி என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று பூஜைகள் முடிந்ததும் மதியம் கோவிலை பூட்டி விட்டு, வீட்டுக்கு சென்று விட்டார்.
மறுநாள் காலை இக்கோவிலின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த கோவிலுக்கு வந்த பக்தர்கள் இதுபற்றி கோவில் நிர்வாகிக்கும், பகண்டை கூட்டுரோடு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் கோவில் நிர்வாகிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கோவிலுக்குள் சென்று பார்த்தபோது, கோவில் வளாகத்தில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த காணிக்கை பணத்தை காணவில்லை.
கொள்ளை
பூசாரி கோவிலை பூட்டிச் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் கோவிலுக்குள் புகுந்து உண்டிலை உடைத்து காணிக்கை பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.