மேலூர்
மேலுரில் மில்கேட்டு என்னுமிடத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு நள்ளிரவில் உள்ளே புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்றுவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற மேலூர் போலீசார் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆராய்ந்தனர். அதில் கோவிலினுள் கடப்பாரை கம்பியுடன் புகுந்த ஒருவன் உண்டியலை உடைத்து திருடியது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அவனை போலீசார் தேடி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்து சென்றனர். இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.