நல்லம்பள்ளி:
தர்மபுரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதையொட்டி நல்லம்பள்ளி அருகே ஒட்டப்பட்டி தொழில் மையம் அருகே, சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது ராட்சத மரக்கிளைகள் முறிந்து விழுந்ததில் மின்கம்பம் உடைந்து சேதமடைந்தது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மின்வாரிய ஊழியர்கள் மரக்கிளைகளை அகற்றி மாற்று மின்கம்பம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.