வியாசர்பாடியில் துணிக்கடையில் புகுந்து தகராறு; உரிமையாளருக்கு கத்திக்குத்து - 3 பேர் கைது

வியாசர்பாடியில் துணிக்கடையில் புகுந்து தகராறு செய்து உரிமையாளரை கத்தியால் குத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-01-29 05:01 GMT

சென்னை வியாசர்பாடி எஸ்.எம்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் விக்ரம் (வயது 22). இவர் வியாசர்பாடி ஏ.கல்யாணபுரம் மெயின் ரோட்டில் துணிக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவரது துணி கடைக்கு வந்த நபர் ஒருவர் கடைக்குள் செருப்பை போட்டுக் கொண்டு உள்ளே வந்தார். அப்போது கடைக்கு வந்த நபருக்கும், விக்ரம் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

பிறகு அக்கம் பக்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அதன் பின்னர், மறுநாள் காலையில் விக்ரம் கடையில் இருந்த போது, தகராறில் ஈடுபட்ட நபர் நண்பர்களுடன் கடைக்குள் புகுந்து விக்ரமை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து வியாசர்பாடியை சேர்ந்த தினேஸ்வரன் (26) மற்றும் சரண் (20) உள்பட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்