மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

Update: 2023-06-02 18:45 GMT

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த ஆலங்கோட்டையை சேர்ந்தவர் மதியழகன் (வயது 53). இவர் மன்னார்குடி அருகே அசேஷம் பகுதியில் கடை வைத்திருந்தார். கடந்த 31-ந்தேதி இரவு கடையை மூடிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மன்னார்குடி அருகே மேல நாகை அருகே வந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு மூளை சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மதியழகன் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி கண்கள், இதயம், சிறுநீரகம், கல்லீரல், கணையம் ஆகிய 5 உடல் உறுப்புகளை தானம் செய்தனர். மதியழகன் இறந்தும் பல பேருக்கு மீண்டும் வாழ்வளித்து வாழ்ந்து கொண்டிருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்