பார்வையற்ற மாற்றுத் திறனாளிக்கு பிரெய்லி ரீடர் கருவி
போட்டித் தேர்வுக்கு தயாராகும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிக்கு பிரெய்லி ரீடர் கருவிைய கலெக்டர் வளர்மதி வழங்கினார்.;
குறைதீர்வு கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.
கூட்டத்தில் நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, வீடுகள் வேண்டி, மின்சாரத்துறை சார்பான குறைகள், கிராம பொதுப்பிரச்சினைகள், குடிநீர்வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மற்றும் பொதுநலன் குறித்த மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.
பிரெய்லி ரீடர் கருவி
மொத்தம் 255 மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
கூட்டத்தில் அரக்கோணம் தாலுகாவை சேர்ந்த பட்டப்படிப்பு முடித்து போட்டித் தேர்வுக்கு தயாராகும் சுரேந்தர் என்ற பார்வையற்ற மாற்றுத் திறனாளிக்கு ரூ.36 ஆயிரத்து 450 மதிப்பில் பிரெய்லி ரீடர் கருவியை கலெக்டர் வழங்கினார்.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முரளி, துணை கலெக்டர் வள்ளி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.