பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம்

பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம்

Update: 2023-07-07 18:45 GMT

திருவெண்காடு அருகே பார்த்தன் பள்ளி கிராமத்தில் பார்த்தசாரதி பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் ஒன்றாகும். பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலில் ஆண்டு பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி பார்த்தசாரதி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து மேளம், தாளம் முழங்கிட கொடியேற்றம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் கிருஷ்ணகுமார் பட்டாச்சாரியார், பட்டாபிராமன் பட்டாச்சாரியார் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்