செவ்வாய்பேட்டை பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் பிரம்மோற்சவ விழா

சேலம் செவ்வாய்பேட்டை பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது.

Update: 2022-11-24 20:29 GMT

சேலம், 

சேலம் செவ்வாய்பேட்டை பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் அலர்மேல் மங்கை பத்மாவதி தாயாருக்கு 18-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று காலை 9 மணிக்கு தாயாருக்கு மகாலட்சுமி அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து ஹோமங்கள், வேதபாராயணங்கள், திருமஞ்சனம், திருவாராதனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், மாலை 6.30 மணிக்கு தாயாருக்கு பட்டாபிராமன் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த பிரம்மோற்சவ விழா வருகிற 29-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி தாயாருக்கு இன்று (வெள்ளிக்கிழமை) கருட சேவையும், நாளை (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 27-ந் தேதி யோக நாராயணன் அலங்காரம், 28-ந் தேதி ஊஞ்சல் மோகனி அலங்காரம், 29-ந் தேதி மகாலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஆயிர வைசிய சமூக மகாஜனங்கள் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

--------------------

Tags:    

மேலும் செய்திகள்