பொன்னேரியில் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா

பொன்னேரியில் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-05-05 13:30 GMT

பொன்னேரி அடுத்த திருவாயர்பாடி கிராமத்தில் பழமை வாய்ந்த வரலாறு சிறப்புமிக்க ஸ்ரீ சௌந்தரவள்ளி தாயார் சமேத ஸ்ரீகரிகிருஷ்ண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பரத்வாஜ முனிவர் வந்து பாடல் பெற்ற தளத்தில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இந்த கோவிலில் நேற்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. முன்னதாக ஸ்ரீகரிகிருஷ்ண பெருமாள் சௌந்தர்வள்ளி தாயாருக்கு சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீகரிகிருஷ்ண பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட 4 மாடவீதிகளில் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்