நீச்சல் பயிற்சியில் சிறுவர், சிறுமிகள் ஆர்வம்

புதுக்கோட்டையில் கோடை வெயிலுக்கு இதமாக நீச்சல் பயிற்சியில் சிறுவர், சிறுமிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டுள்ளனர்.

Update: 2023-05-10 17:35 GMT

கோடை விடுமுறை

தமிழகத்தில் பள்ளிகளில் பொதுத்தேர்வு, ஆண்டு இறுதித்தேர்வு முடிவடைந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த கோடை விடுமுறையை மாணவ-மாணவிகள் பயனுள்ளதாக போக்க விளையாட்டு பயிற்சிகளில் ஆர்வமாக ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல தற்போதைய கோடை வெயிலுக்கு இதமாக நீச்சல் பயிற்சியிலும் சிறுவர், சிறுமிகள் ஆர்வமாக கலந்து கொண்டுள்ளனர். புதுக்கோட்டையில் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நீச்சல் குளம் உள்ளது. இதில் வழக்கமாக நீச்சல் பயிற்சி அளிக்கப்படுவது உண்டு. இதேபோல டோக்கன் கட்டணம் செலுத்தி நீச்சல் குளத்தில் குளிக்க அனுமதியும் உண்டு. இதனை வாலிபர்கள், இளம்பெண்கள் உள்ளிட்டோர் பயன்படுத்தி வருகின்றனர்.

நீச்சல் பயிற்சி

இந்த நிலையில் தற்போது கோடை கால பயிற்சி முகாமில் நீச்சல் பயிற்சியும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. இதில் காலை மற்றும் மாலை வேளைகளில் பயிற்சி நடைபெறுகிறது. இதில் சிறுவர், சிறுமிகள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். கோடை வெயிலின் தாக்கம் இருக்கிற நிலையில் அவர்களுக்கு இதமாக இந்த பயிற்சி அமைந்துள்ளது.

இதனால் அவர்களும் ஆர்வமாக பங்கேற்கின்றனர். பெற்றோரும் அவர்களை அழைத்து வந்து நீச்சல் குளத்தின் வளாகத்தில் அமர்ந்திருக்கின்றனர். தங்களது குழந்தைகள் நீச்சல் பயிற்சி பெறுவதை அவர்களும் கண்டு மகிழ்கின்றனர். குறைந்தது 1 மணி நேர பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக நீச்சல் பயிற்சியாளர்கள் சிறுவர், சிறுமிகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்