ஆடிப்பெருக்கையொட்டிநாமக்கல் பூங்காவில் குவிந்த சிறுவர், சிறுமிகள்

Update:2023-08-04 00:15 IST

நாமக்கல் பூங்கா சாலையில் நகராட்சிக்கு சொந்தமான செலம்பகவுண்டர் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள், ராட்டினங்கள் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் உள்ளன. இங்கு தினசரி மாலை நேரங்களில் குழந்தைகளுடன் வந்து பெரியவர்கள் நேரத்தை செலவிடுவது உண்டு. நேற்று ஆடிப்பெருக்கையொட்டி இந்த பூங்காவில் சிறுவர், சிறுமிகள் மற்றும் பெரியவர்கள் என ஏராளமானோர் குவிந்தனர். இதனால் பூங்கா களை கட்டியது.

இதேபோல் நாமக்கல் மலைக்கோட்டைக்கும் வழக்கத்தை விட அதிகமான பொதுமக்கள் சென்று நகரின் அழகையும், மலைகோட்டையின் அழகையும் ரசித்து சென்றனர். நாமக்கல் மாவட்டத்தின் சுற்றுலா தலமாக விளங்கும் கொல்லிமலை மற்றும் ஜேடர்பாளையம் தடுப்பணை பகுதிகளிலும் நேற்று ஆடிப்பெருக்கையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஆடிப்பெருக்கையொட்டி நாமக்கல் மாவட்டத்திற்கு நேற்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்