கடையம் அருகே டெங்கு காய்ச்சலால் சிறுவர்-சிறுமிகள் பாதிப்பு
கடையம் அருகே டெங்கு காய்ச்சலால் சிறுவர்-சிறுமிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கடையம்:
கடையம் அருகே உள்ள புலவனூரில் டெங்கு காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. அந்த ஊரைச் சேர்ந்த 4 சிறுமிகள் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 3 சிறுவர்கள் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலர் பாவூர்சத்திரம் தனியார் ஆஸ்பத்திரியிலும், கடையத்தில் உள்ள ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் காய்ச்சலை தடுக்க சுகாதார துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.