மாணவியை கடத்திய வாலிபர், போக்சோவில் கைது

மயிலாடுதுறையில் மாணவியை கடத்திய வாலிபர், போக்சோவில் கைது;

Update: 2023-07-28 18:45 GMT


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மேலவாசல் குமரன் தெருவை சேர்ந்தவர் ஹலிபுல்லா. இவருடைய மகன் அப்பாஸ் (வயது 30). இவர் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்து சென்றபோது, 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 24-ந்தேதி பள்ளிக்கு சென்ற மாணவியை ஆசைவார்த்தை கூறி, அப்பாஸ் காரில் மன்னார்குடிக்கு கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து மாணவியின் தாயார் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பலதா மற்றும் போலீசார் மாணவியை மீட்டு விசாரணை நடத்தினர். இதைதொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பாஸை கைது செய்து நாகை போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்