டிராக்டர் மோதி சிறுவன் படுகாயம்

களக்காடு அருகே டிராக்டர் மோதி சிறுவன் படுகாயம் அடைந்தான்.

Update: 2023-06-08 19:12 GMT

களக்காடு:

களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் சவேரியார் ஆலய வடக்கு தெருவை சேர்ந்தவர் பால் ஜோஸ். விவசாயி. இவரது மகன் கனிஸ் ஆரோன் (வயது 8). இவன் 4-ம் வகுப்பு படித்து விட்டு, தற்போது கோடை விடுமுறையால் வீட்டில் இருந்து வருகிறான். சம்பவத்தன்று கனிஸ் ஆரோன் அங்குள்ள பாண்டியாபுரம் அம்மன் கோவில் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர் அவன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவனை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக களக்காடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுவன் கனிஸ் ஆரோனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் களக்காடு போலீசார், விபத்தை ஏற்படுத்திய டிராக்டரை ஓட்டி வந்த கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டலை சேர்ந்த குமரேசன் மகன் மாயகிருஷ்ணன் (23) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்