போடியில் மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் படுகாயம்
போடியில் மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் படுகாயம் அடைந்தான்.
போடி டி.வி.கே.கே.நகரை சேர்ந்தவர் சேக் அப்துல்லா (வயது 35). இவரது மகன் அபிபுல்லா (6). இவன் சம்பவத்தன்று வீட்டின் முன்பு தெருவில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அபிபுல்லா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயம் அடைந்த சிறுவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கிருந்து அவன் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சேக் அப்துல்லா கொடுத்த புகாரின்பேரில் போடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோதிவிட்டு நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் அதனை ஓட்டிவந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.