பாம்பு கடித்து சிறுவன் சாவு
மயிலாடுதுறை அருகே பாம்பு கடித்து சிறுவன் சாவு
மயிலாடுதுறை அருகே ஆனதாண்டவபுரம் ராதாநல்லூர் தெற்குத் தெருவை சேர்ந்த சுந்தர் மகன் கார்த்திகேயன் (வயது 13).அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த கார்த்திகேயன்,. சம்பவத்தன்று வீட்டில் உள்ள ஆடு, மாடுகளுக்கு புல் அறுப்பதற்காக வயல்வெளி பகுதிக்கு சென்றுள்ளார். புல் அறுத்துக் கொண்டிருந்தபோது புல்வெளியில் கிடந்த பாம்பு ஒன்று கார்த்திகேயனை கடித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் சத்தம் போட்டுள்ளார். இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே கார்த்திகேயன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுபஸ்ரீ மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.