அய்யலூர் அருகே பாம்பு கடித்து சிறுவன் சாவு
அய்யலூர் அருகே பாம்பு கடித்து சிறுவன் இறந்தது.
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே உள்ள செம்பன் பழனியூரை சேர்ந்தவர் ரமேஷ். விவசாயி. அவருடைய மகன் யுவராஜ் (வயது 16). இவர், 10-ம் வகுப்பு படித்துவிட்டு தனது தந்தையுடன் சேர்ந்து விவசாய பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்தநிலையில் நேற்று இரவு யுவராஜ் தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஊர்ந்து வந்த விஷப்பாம்பு ஒன்று யுவராஜை கடித்துள்ளது. இதனால் அவர் வலியால் அலறி துடித்தார். இதனை பார்த்த குடும்பத்தினர், அவரை மீட்டு அய்யலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே யுவராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.