தூக்குப்போட்டு சிறுவன் தற்கொலை

மோட்டார் சைக்கிள் வாங்கி தராததால் தூக்குப்போட்டு சிறுவன் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-09-25 18:45 GMT

கோவை

மோட்டார் சைக்கிள் வாங்கி தராததால் தூக்குப்போட்டு சிறுவன் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

17 வயது சிறுவன்

கோவை சுக்கிரவார்பேட்டையை சேர்ந்தவர் பால்பாண்டி. தொழிலாளி. இவரது மகன் திருமுருகன்(வயது 17). இவர் 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு, வீட்டில் இருந்து வந்தார்.

இதற்கிடையில் கடந்த சில நாட்களாக திருமுருகன் தனக்கு புதிய மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு தனது பெற்றோரிடம் கேட்டு வந்தார். அதற்கு அவர்கள் ஒரு மாதம் கழித்து புதிய மோட்டார் சைக்கிள் வாங்கி தருவதாக தெரிவித்தனர்.

தற்கொலை

ஆனால், தனக்கு உடனே புதிய மோட்டார் சைக்கிள் வாங்கி தர வேண்டும் என்று கேட்டு திருமுருகன் அடம் பிடித்து வந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் அவர் மன உளைச்சலில் காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வாழ்க்கையில் விரக்தியடைந்த திருமுருகன், தனது வீட்டு கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து வெறைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிள் வாங்கி தராததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்