சிறுவன் விஷம் குடித்து தற்கொலை

பத்தமடை அருகே சிறுவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டான்.

Update: 2023-10-11 20:01 GMT

சேரன்மாதேவி:

நெல்லை மாவட்டம் பத்தமடை அருகே உள்ள பூங்குடையார் குளம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சீனிராஜ் மகன் கண்ணன் (வயது 16). இவர் நேற்று மாலை வீட்டில் வைத்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து உள்ளார். உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்