பாப்பாரப்பட்டி அருகே பிறந்து 20 நாட்களே ஆன ஆண் குழந்தை திடீர் சாவு-போலீசார் விசாரணை

Update: 2022-12-20 18:45 GMT

தர்மபுரி:

பாப்பாரப்பட்டி அருகே பிறந்து 20 நாட்களே ஆன ஆண் குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆண் குழந்தை

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள தட்டராபட்டி கிராமத்தை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 25). லாரி டிரைவர். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ராஜலட்சுமி என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்தநிலையில் மீண்டும் கர்ப்பமான ராஜலட்சுமிக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு இதயத்தில் பாதிப்பு இருப்பது மருத்துவ சோதனையின் போது தெரியவந்தது.

வழக்குப்பதிவு

இதையடுத்து அந்த குழந்தை தர்மபுரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தையை பெற்றோர் வீட்டிற்கு கொண்டு சென்றனர். இதனிடையே அந்த ஆண் குழந்தைக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இதனால் குழந்தையை பெற்றோர் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, நேற்று முன்தினம் ஆண் குழந்தை பரிதாபமாக இறந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்