போக்சோ சட்டத்தில் சிறுவன் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டான்.;

Update: 2023-05-09 22:50 GMT

நெல்லை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் நேற்று முன்தினம் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். பின்னர் சிறுவன் நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள காப்பகத்தில் அடைக்கப்பட்டான்.

Tags:    

மேலும் செய்திகள்